மட்டக்களப்பில் பிரபல உணவகம் ஒன்றில் தீ! (காணொளி இணைப்பு)

மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகத்தின் மேல்மாடி பகுதியில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மத்திய வீதியில் மரியாள் பேராலயத்திற்கு முன்பாகவுள்ள பிரபல உணவகம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினர் மற்றும் படையினர், பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

குறித்த பகுதியில் பெருமளவான படையினரும் பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனனர்.

இந்நிலையில் குறித்த தீ பரவல் சம்பவம் எதனால் இடம்பெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!