இறப்பர் பயிரிட நடவடிக்கை!!

2021 ஆம் ஆண்டில், இறப்பர் அறுவடையை, 45 மில்லியன் கிலோ கிராம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதுடன், இறப்பர் ஏற்றுமதி மூலம், 170 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொள்ள, நிறுவன தோட்ட சீர்திருத்த அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

நிறுவன தோட்ட சீர்திருத்தங்கள், தேயிலை தோட்டம் தொடர்பான பயிர்கள், தேயிலை தொழிற்சாலை நவீன மயமாக்கல் மற்றும் தேயிலை ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகரத்னா பண்டா, இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு, 1.9 பில்லியன் ரூபாவை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மானியங்களை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், புதிய சாகுபடி மற்றும் உரம், இறப்பர் தொழிற்துறையை வளர்ப்பதற்கான வருடாந்த செயற்திட்டத்தை தயார் செய்ய, அமைச்சு முடிவு செய்துள்ளது.

இறப்பர் தொழில், ஈரமான வலயத்தில் அமைந்துள்ளது.

இருப்பினும், நில பற்றாக்குறை காரணமாக, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில், இறப்பர் நிலங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில், இறப்பர் பயிரிடுவதற்கான திட்டங்கள், சாதகமான முடிவுகளைத் தந்தன.

இருப்பினும், வறண்ட வலயத்தில், பாதகமான காலநிலை நிலைமைகளை சீர் செய்யும் வகையில், அங்கு நீர்ப்பாசன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

என நிறுவன தோட்ட சீர்திருத்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!