பொகவந்தலாவ நகர வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு!

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ நகர வீதியினை நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தை வேல் திறந்து வைத்தார்.

பொகவந்தலாவ நகரவீதி காப்பட் இடும் பணி நிறைவடைந்ததை அடுத்து நேற்று திறந்து வைக்கப்பட்டது.

வீதி திறப்பு விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

பொகவந்தலாவ நகர வீதி காப்பட் இடும் பணியை கடந்த வாரம் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் நோர்வுட் பிரதேச சபையின் உதவி தவிசாளர் தட்சணாமுர்த்தி கிஷோகுமார் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் ஆரம்பித்து வைத்தனர்.

அதன் பின்னர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச சபை உறுப்பினர்களான பா.சிவநேசன், பழனிவேல் கல்யானகுமார் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் பலரும் இணைந்து ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது எதிர்வரும் 14ம் திகதி பொகவந்தலாவ நகர வீதியை தொழிலாளர் தேசிய சங்கத்தின் அழைப்பின் பேரில் வீதிகள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கபிர்ஹாசிம் திறந்த வைப்பதற்கு நாள் குறிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை நோர்வுட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தை வேலினால் குறித்த வீதி திறந்து வைக்கபட்டுள்ளது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!