அமெரிக்காவை அச்சுறுத்தும் மழை!

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் பெய்த பலத்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் பெய்த பலத்த கனமழை காரணமாக வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ள்ளது.

கனமழை காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ள நீர் வெளியேறும் வரை வீதிப் போக்குவரத்தை தவிர்க்குமாறும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் தரைத்தளத்தில் அமைந்துள்ள பத்திரிகையாளர் மன்றம் வரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இரு நாட்கள் கழித்து மீண்டும் மற்றொரு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

திடீர் கனமழை காரணமாக வீடுகள், வாகனங்கள் என பெரியளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!