உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்யை தினம் மோதிய 12வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின், முதலாவது அரையிறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்றைய தினம் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாட களம் நுழைந்த நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது தனது ஆரம்ப இலக்களை சரியான இடைவெளியில் இழந்தது.
இதனால் போட்டி சுவாரசியமின்றி நகர்ந்திருந்தது.
இந்நிலையில் போட்டியின் 47 ஆவது பந்து பரிமாற்றத்தின் போது மழை காரணமாக போட்டி இடைநிறுத்தி வைக்க நேர்ந்தது.
தொடர்ந்தும் மழை நீடித்து வந்தால், உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகளுக்கு இணங்க போட்டி இன்றைய தினம் வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி போட்டி இன்று, பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.
ஒத்திவைக்கப்பட்டுள்ள போட்டியின் படி, நியூசிலாந்த அணிக்கு இன்றைய தினம் 23 பந்துகள் மீதமாக உள்ளது.
நியூசிலாந்து அணி இதுவரை 5 இலக்குகளை மாத்திரம் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)