பெருந்தோட்டங்களில் காணப்படும் மரங்களை வெட்டுவதற்கு, புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக
பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டங்களில் காணப்படும் மரங்களை தோட்ட நிர்வாகங்கள் தங்களுக்கு ஏற்றமாதிரி தான்தோன்றிதனமாக வெட்ட முடியாது.
தற்போது அவை அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தபட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு மரங்கள் வெட்ட வேண்டுமானால், இனிவரும் காலங்களில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் அனுமதி பெற வேண்டும் என வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை மாவட்டம் ஹாலிஎல ஊவஹைலண்ட்ஸ் நெலுவ தோட்டம் நெலுவ பிரிவிற்கான வீதி, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கபட்டு, மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. (நி)