திருகோணமலை மாணவர்கள் விவகாரம்:சட்டமா அதிபர் விசேட நடவடிக்கை!

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி 05 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 13 நபர்களும் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்து, கடந்தவாரம் திருகோணமலை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே, இந்த சம்பவம் தொடர்பில் மீள விசாரணை நடாத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வழக்கில் வைத்திய கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன், வை.புங்களலோகன், மற்றும் பரராஜசிங்கம் கோகுல்ராஜ் ஆகியோர் முக்கிய சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவர்கள் குறித்தும் அறியுறுமாறு சட்டமா அதிபர் பதில் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!