பூஜாப்பிட்டிய பிரதேச செயலக பிரிவில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாதுள்ள, கல்ஹின்னை வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி பூஜாப்பிட்டிய பிரதேச செயலக பிரிவில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாதிருந்த கல்ஹின்னை பட்டகொல்தெனிய வீதியை புனரமைக்க அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த வீதி கம்பரெலிய திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ளது.
இந்த வீதியை புனரமைப்பதன் ஊடாக அப்பகுதியில் உள்ள விகாரை மற்றும் பள்ளிவாசல்களுக்கு செல்லும் மக்கள் பயனடையவுள்ளனர். (நி)