மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த, முதன்மை நிறுவனமான மாநகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் மற்றும் திட்ட காரியாலயம் மூலம், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில், மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பௌதீக அபிவிருத்திக்கு இணையாக, மக்கள் மத்தியில் மனித வள அபிவிருத்தியை மேற்கொள்வதன் அபிலாசையுடன் ‘உறுதி’ விளம்பர வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களில், மனித வள அபிவிருத்தி, பிரதானமான திட்டங்களின் அடித்தளமாக அமைந்துள்ளது.
இதன் மூலம், மனிதர்களை நாட்டிற்கு திறன் மிக்கவர்களாக மாற்றுவதாகும்.
இதனால், மக்கள் அனைவரும், நாட்டின் அனைத்து பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப, ‘உறுதி’ வேலைத்திட்டத்திற்கு உறுதியாக இருப்பார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையின் பொருளாதாரம், வணிகம், திறமை, அதேபோன்று அரசில் கேந்திர நிலையமாக அதிவேக அபிவிருத்திகள் இடம்பெறும், கொழும்பு நகருக்குள் வாழும், குறைந்த வருமானம் பெறும் குடியேற்றவாசிகளை, அவர்களின் பிரதான இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதற்கு பதிலாக, கௌரவமான வாழ்க்கை முறையை கட்டியெழுப்பும் நோக்கில், இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
வீட்டுக்கு பதிலாக, வாழ்க்கையை பெற்றுக்கொடுத்து, முறையான மாடி வீட்டுத் திட்டத்தில் மக்களை குடியமர்த்துவதற்காக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் வழிகாட்டலில், மாநகர அபிவிருத்தி அதிகார சபை மாநகர புனர்நிர்மாண வேலைதிட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருட காலத்தில், புதிய வீட்டுக் கட்டமைப்பு 4 ஆயிரத்து 758 மக்கள் பாவiனைக்காக கையளிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக மாநகர அபிவிருத்தி அதிகாரசபை 21 ஆயிரத்து 411 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மேலும் 6 ஆயிரத்து 372 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், அதற்காக 28 ஆயிரத்து 674 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீட்டுத்திட்டங்களில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக, பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.
நான்காம் தொழிற்துறை புரட்சியை வெற்றி கொள்வதற்காக, இந்த நாட்டை வெற்றி கொள்வதற்காக நாட்டை தயார்ப்படுத்தும் நோக்கில், ஹோமாகம தொழில்நுட்ப நகரம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
மாலபேயில் இருந்து ஹோமாகம வரை, ஆயிரத்து 200 ஏக்கர் காணிப்பரப்பில் 4 வலயங்கள் என, தொழில்நுட்ப நகரம் அமைக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு நகரின் கழிவு நீர்ப்பிரச்சினைக்கு தீர்வாக, 5 ஆயிரத்து 221 மில்லியன் ரூபா முதலீட்டில், சுரங்க மார்க்க கட்டமைப்பு, கொழும்பு டொரிங்டன் மற்றும் நவமுத்துவெல்ல பகுதியில் அமைக்கப்படுகின்றது.
இதேபோன்று, 2 ஆயிரத்து 870 மில்லியன் ரூபா முதலீட்டில், மழை நீர் குழாய்த்திட்டம் அமைத்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கொழும்பு நகரிலும் களனி கங்கை இரு மருங்கிலும் குடியிருக்கும் மக்களின் குடியிருப்புக்கள் நீரில் மூழ்காத நிலை உருவாகும்.
அத்துடன், கொழும்பில் இலகு ரயில் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், கொழும்பு வணிக மாவட்டத்தை விரிவுபடுத்தி, புதிய திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் கீழ், துறைமுக நகரம் நிர்மாணிக்கப்படுகின்றது. (சி)