தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் இலங்கையில் மீண்டும் அறிமுகம்

தூய வெள்ளை இயற்கை தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக, நம்பிக்கையை வென்ற நாமமான என்ஜோய், தனது தேங்காய் எண்ணெய் தெரிவுகளை, இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது.

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் சான்றளிக்கப்பட்ட, ஒரேயொரு தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் தயாரிப்பாக திகழும் என்ஜோய், முழுமையாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது.

இது தொடர்பான அறிமுக நிகழ்வு, கொழும்பில் இடம்பெற்றது.

‘அவளின் தெரிவு’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற மீள் அறிமுக நிகழ்வில், நடிகை பூஜா உமாசங்கர் கலந்துகொண்டார்.

இதன் போது கருத்து வெளியிட்ட, ஆதம்ஜி லுக்மன்ஜி அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சுரேன் பெர்னான்டோ, ‘சந்தையில் பல காலமாக காணப்பட்ட நிலையில், தயாரிப்பு முதல் பொதியிடல் வரையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த நாம் விரும்பினோம்.

தேங்காய் மற்றும் தேங்காய் அடிப்படையிலான தயாரிப்புகளில் எமது ஈடுபாடு மற்றும் நிபுணத்துவம், சுமார் 150 வருட காலம் பழமையானது.

அவ்வாறான நிலையில், நுகர்வோருக்கு உயர் தரமான தயாரிப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கான முழு ஆற்றலையும் நாம் கொண்டுள்ளோம்.’ என குறிப்பிட்டார்.

தூய தேங்காய் எண்ணெய் உற்பத்தி, பாரம்பரியமான முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

என்ஜோய், தூய வெள்ளை தேங்காய் எண்ணெய், 2001 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது முதல், நம்பிக்கையை வென்ற தயாரிப்பாக திகழ்கின்றது.

என்ஜோய் இன் பிரத்தியேகமான உள்ளம்சங்களாக, இயற்கையான முறையில் எவ்விதமான இரசாயன பதார்த்தங்களும் சேர்க்கப்படாத வகையில் அல்லது உயர் வெப்ப நிலைக்கு வெளிப்படுத்தாத வகையில் அமைந்துள்ளது.

என்ஜோய் தேங்காய் எண்ணெய், கொலஸ்ரோல் சேர்மானமற்றதுடன், செயற்கை கொழுப்புகளை கொண்டிருப்பதில்லை.

என்ஜோய் தேங்காய் எண்ணெய், எஸ்.எல்.எஸ் 32 தரச்சான்றை பெற்றுக்கொண்டுள்ளதுடன், உணவு பாதுகாப்பு முகாமைத்துவ கட்டமைப்புக்காக நிறுவனம் ஐ.எஸ்.ஓ 22000 சான்றையும் பெற்றுள்ளது.

மேலும் நிறுவனத்தின் நீண்ட கால தயாரிப்பான, வறுத்த தேங்காய் எண்ணெய் தயாரிப்புக்கு, தெற்காசிய சந்தையில் பெருமளவு வரவேற்பு காணப்படுகின்றது.

பெருமளவில் இது உயர் தர கூந்தல் எண்ணெய் வகையாக பயன்படுத்தப்படுகின்றது.

எதிர்வரும் காலப்பகுதியில், புதிய தயாரிப்பு தெரிவுகளை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதுடன், இதில் வெர்ஜின் தேங்காய் எண்ணெய் மற்றும் போஷாக்கு நிறைந்த தயாரிப்புகள் போன்றன அடங்கியுள்ளன.

இதேவேளை, உலகில் தெங்கு உற்பத்தி பொருட்களை, இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் உயர் 3 ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக, ஆதம்ஜி லுக்மன்ஜி அன்ட் சன்ஸ் நிறுவனம் திகழ்கின்றது.

சிறிய, நடுத்தரளவு, சுயதொழிலில் ஈடுபடும் கால்நடை பண்ணையாளர்களுக்கு, தமது விலங்குகளுக்கு உணவூட்ட அவசியமான, சோயா, அவரை மற்றும் இதர விலங்கு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் செயற்பாடுகளையும், ஆதம்ஜி லுக்மன்ஜி அன்ட் சன்ஸ் குழுமம் மேற்கொள்கின்றது.

நிறுவனத்தின் தேங்காய் செக்கு தயாரிப்பு, நிறுவனத்தின் உயர் தரம் வாய்ந்த உற்பத்தியாக கால்நடைகளுக்கு உணவூட்டுவதற்காக விற்பனை செய்யப்படுகின்றது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!