ஜனாதிபதி, மரண தண்டனை விவகாரத்தை, தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகின்றார் என, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று, கொழும்பில் வஜிராஷரம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மரண தண்டணை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் போது, அரசியலமைப்பின் பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள ஏற்பாடுளை ஜனாதிபதி பின்பற்றினாரா?
ஜனாதிபதி, மரண தண்டணை விவகாரத்தை, தனது அரசியல் தேவைக்காக மாத்திரமே பயன்படுத்திக் கொள்கின்றார்.
போதைப்பொருள் ஒழிப்பிற்கு மரண தண்டணை ஒருபோதும் தீர்வாக அமையாது.
முத்துறையில் அதிகாரங்களும் அரசியலமைப்பின் பிரகாரம் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் ஜனாதிபதி நேரடியாக தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நீதித்துறை சார்ந்த விடயங்களில் தீர்மானங்களை முன்னெடுக்கின்றார்.
என குறிப்பிட்டுள்ளார். (சி)