வவுனியாவுக்கு 7 பதக்கங்கள்

2019 ஆம் ஆண்டுக்கான, வடக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில், வவுனியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற போட்டியில், வவுனியாவை பிரதிபலித்து கலந்துகொண்ட மாணவர்கள் 7 பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களான கெ.நிசோபன் ஆயிரத்து 500 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தையும், 5 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கத்தையும், கெ.நிசாந்தன் ஆயிரத்து 500 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்திருந்தனர்.

வவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவியான எஸ்.கேமபிரியா 5 ஆயிரம் மீற்றர் மற்றும் ஆயிரத்து 500 மீற்றரில் தங்கப்பதக்கத்தையும், 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கத்தையும், சிறிராமாபுரம் திருஞான சம்பந்தர் பாடசாலை மாணவியான ஜெ.தனுசியா 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

இதன் மூலம், வவுனியா மாவட்டத்திற்கும், பயிற்சியாளருக்கும், 7 மாணவர்களும் பெருமை சேர்த்துள்ளதுடன், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!