அம்பாறையில் இருவேறு தற்கொலை சம்பவங்கள்

அம்பாறை கல்முனை பகுதியில், இரு வேறு தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்முனை ஜீ.பி.எஸ் வீதிப்பகுதியை சேர்ந்த, 22 வயதுடைய முத்துலிங்கம் ஜெகநாத் என்ற இளைஞன், தனது வீட்டின் சாமி அறை கூரையில், சேலை துணி ஒன்றின் உதவியுடன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவ இடத்திற்கு சென்ற, கல்முனை பொலிஸாரும் அம்பாறை தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இன்று காலை சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், கடற்தொழிலை மேற்கொண்டு வந்துள்ளதாக, பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கல்முனை சேனைக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீட்டு முற்றத்திலுள்ள மரத்தில், குறித்த குடும்பஸ்தர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான, 53 வயதுடைய கந்தையா யோகலிங்கம் என்பவர் இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

குடும்பத்தகராறு காரணமாக, குடும்பஸ்தர் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!