காயத்தால் தொடரிலிருந்து வெளியேறும் தனஞ்சய!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான, டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியுள்ளது.

டெஸ்ட் தொடரின், முதலாவது போட்டியின், முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடும்போது, இலங்கை வீரர் தனஞ்சய டி சில்வா காயமடைந்தார்.

காயத்திலிருந்து தனஞ்சய டி சில்வா மீள்வதற்கு இரு வாரங்கள் தேவை என மருத்து அறிக்கைகள் குறிப்பிட்டதற்கினங்க, தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடரிலிருந்து அவர் வெளியேறும் நிலையேற்பட்டுள்ளது.

தனஞ்சய டி சில்வா நேற்றைய தினம் 106 பந்துகளை எதிர்கொண்டு 79 ஓட்டங்களைப் பெற்று, சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய நிலையில், காயங்காரணமாக வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!