பாதசாரி கடவை அமைத்து தருமாறு முல்லைத்தீவு மல்லாவி மயில்வாகனம் தமிழ் வித்தியாலய பாடசாலைச் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மல்லாவி மயில்வாகனம் தமிழ் வித்தியாலயத்தின் முன்பாக பாதசாரி கடவை ஒன்றை அமைத்து தருமாறு பாடசாலை சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாங்குளம் துணுக்காய் பிரதான வீதி அருகில் காணப்படுகின்ற மயில்வாகனம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகள் இடம்பெற்றுவருகின்றன.
அத்தோடு, மயில்வாகனம் தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 200 மாணவர்கள் கல்வி கற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்றபோதும் பாடசாலை விட்டுச் செல்கின்ற போதும் பாதையைக் கடப்பதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாலும் தரம் 5க்குட்பட்ட சிறிய மாணவர்களை கருத்தில்கொண்டு, பாடசாலைக்கு முன்பாக பாதசாரி கடவை அமைக்கப்படவேண்டும் என பாடசாலை சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, பாதசாரி கடவை அமைப்பது தொடர்பில் முன்னரும் பல தடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும், அவை எவையும் கருத்தில் கொள்ளப்படவில்லை எனவும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். (நி)