கிளிநொச்சி தொண்டமான் நகர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றது.
இதில், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், அடிக்கலை நாட்டி வைத்தார்.
வீதி அபிவிருத்திக்காக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 50 மில்லியன் நிதியில், 68 இலட்சம் ரூபா பெறுமதியில், குறித்த வீதி புனரமைக்கப்படுகின்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைக்கப்படும் வீதியானது, கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான, சுமார் 2 கிலோமீற்றர் நீளமான வீதியாகும்.
இதில், 500 மீட்டர் வீதி, தற்பொழுது அபிவிருத்தி செய்யப்படுகின்றது. (சி)