ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் புதிய அங்கத்தவர்களுக்கான கூட்டம், இன்று அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினருமான யூ.கே.ஆதம்லெப்பை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கான புதிய அங்கத்துவப் படிவங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
எதிர்வரும் ஆண்டு தேர்தல் ஆண்டாக அமையவுள்ளதால், பிரதேசங்கள் தோறும் கிராம மட்டத்திலான ஐக்கிய தேசிய கட்சியின் கிளைக் குழுக்களை அமைப்பது தொடர்பிலும், பிரதேச ரீதியாக மக்கள் எதிர் நோக்கி வரும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும், இதன் போது கருத்துக்கள், ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன.
நாம் அனைவரும் ஓற்றுமையுடன் செயற்படும் போதே எமது உரிமைகளையும், அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்ள முடியும். மாறாக நாம் பிரிந்து நின்று செயற்படுவோமானால் எம்மை பலவீனப்படுத்தி அரசியல் செய்வதற்கே அனைவரும் முற்படுவர் என ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பை இதன் போது தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தொகுதி அமைப்பாளர்கள் ஊடகவே ஆலோசனைகளைப் பெற்று அனைத்து வேலைத் திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு கட்சி தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். (சி)