திருகோணமலை மூதூர் பிரதேச சபை தவிசாளரின் எண்ணக்கருவில், பசுமைப்புரட்சி எனும் வேலைத்திட்டம், மூதூரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில், இன்று காலை சூழலுக்கு பயன்தரும் 20 மரக்கன்றுகள் நடப்பட்டன.
அத்துடன், இந்த பசுமைப்புரட்சி வேலைத்திட்டம், மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட சகல கிராமங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்றைய மரக்கன்றுகள் நடும் நிகழ்வில், மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஹரீஸ், ஏ.எஸ்.எம்.தாணீஸ், பீ.டி.ஆப்தீன், பீ.டி.பைஸர், எம்.வஹ்ஜீத், எம்.ஜெஸீம் மற்றும் மூதூர் திடிர் மரண விசாரணை அதிகாரி எம்.லாபீர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். (சி)