கண்டி வைத்தியசாலையிலிருந்து அத்துரலிய ரத்தின தேரர் வெளியேறினார்.

கண்டி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் வைத்தியசாலையிலிருந்து இன்று நண்பகல் வெளியேறியுள்ளார்.

உடல்நிலை தேறியதனை அடுத்து அவர் இன்று காலை பிக்குகள் விடுதிக்கு மாற்றப்பட்டதாகவும் ஆயினும் அத்துரலிய ரத்தின தேரர் சுய விருப்பின் பேரில் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக கண்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.

றிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லா, அசாத்சாலி ஆகியோர் பதவி விலக்கப்பட வேண்டும் என கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் கடந்த 31ம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார். நான்கு நாட்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் குறித்த மூவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர். இதனையடுத்து உடல்நிலை சோர்வடைந்திருந்த அத்துரலிய ரத்தின தேரர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!