காலி, கரன்தெனிய பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கெகிரிஸ்கந்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் உயிரிழந்த இடத்தில் மின்சார கம்பிகள் இருந்ததாகவும் பன்றி வேட்டைக்காக குறித்த மின்சார கம்பிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கரன்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(சி)