ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் பாதுகாப்பு அமைச்சின் கட்டிடமொன்றை இலக்கு வைத்து தாலிபான் தீவிரவாதிகள் இன்று நடாத்திய கார் குண்டுத் தாக்குதலில், 14 பேர் பலியாகியுள்ளதாகவும், 140 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் 6 பாதுகாப்புப் படையினரும், 7 பொது மக்களும் உள்ளடங்குவதாகவும் சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
உயிரிழந்தவர்களுள் சிறு பிள்ளையொன்றும் காணப்படுவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் 27 பாடசாலை மாணவர்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களாக நடைபெற்று வரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடா நகரில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுக் கொண்டிருக்கையிலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.(சி)