அம்பாறை கடலில் கரையொதுங்கிய இளங்குடும்பஸ்தரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது

அம்பாறையில் கடற்கரையோரமாக வீழ்ந்து நீரில் மூழ்கி கரையொதுங்கியதாக கூறப்பட்ட இளங்குடும்பஸ்தரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பள்ளி கடலோரமாக இனந்தெரியாத குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு உயிரிழந்து கிடந்தவர் கல்முனைக்குடி-2 28 பி கிறீன் பில்ட் வீட்டுத்திட்டத்தை சேர்ந்த முஹம்மட் நஸ்லான் என்ற ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

சடலமாக மீட்கப்பட்டவர் அண்மைக்காலமாக குடும்ப பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து அடிக்கடி சச்சரவு செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் மது பாவித்திருந்த நிலையில் மீட்கப்பட்டவரது சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபடப்டுள்ளது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!