முல்லையில் தலைமைத்துவப் பயிற்சி நிறைவு

முல்லைத்தீவில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக பயிற்சி வழங்கப்பட்டவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள இளைஞர் படையணி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இரண்டு வார காலமாக இளைஞர்களுக்குத் தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த பயிற்சியின் நிறைவு நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் இளைஞர் படையணி நிலையப் பொறுப்பதிகாரிஇ வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவு விழாவினை முன்னிட்டு இத்ததான முகாம் ஒன்றும் நடத்தப்பட்டது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் முதற்கட்டமாக தொழிலுக்காக தெரிவுசெய்யப்பட்டு தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்ட 54 பயனாளிகள் உட்பட பலரும் இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

நிகழ்வில் தமிழ்இ சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்தவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

தலைமைத்துவ பயிற்சியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகள்இ எதிர்வரும் வாரங்களில் ஒவ்வொரு பிரதேச செயலகர் பிரிவுகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்டு சேவைக்காக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!