கொரோனா: அதிக மரணங்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவு

நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 109 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில், வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த 109 பேரில் மூவர் 10 வயதிற்கும் – 30 வயதிற்கும் உட்பட்டவர்கள் என்பதுடன் நால்வர் 31 இற்கும் 40 வயதிற்கும் உட்பட்டவர்கள்.

மேலும் 41 வயதிற்கும் 50 வயதிற்கும் உட்பட்ட 16 பேர், 51 வயதிற்கும் 60 வயதிற்கும் உட்பட்ட 21 பேர் மற்றும் 61 வயதிற்கும் 70 வயதிற்கும் உட்பட்ட 20 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 71 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளதுடன் அந்த எண்ணிக்கை 45 ஆக தெரிவிக்கப்படுகின்றது.

மொத்த மரணங்களில் 81 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் 13 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறையில் 6 பேர், குருணாகலையில் 4 பேர், புத்தளத்தில் 3 பேர், நுவரெலியாவில் ஒருவர் மற்றும் இனங்காணப்படாத ஒருவரது மரணமும் அவற்றுள் உள்ளடங்குகின்றது.

109 மரணங்களில் 44 பேர் வீடுகளில் அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளடன் 64 பேர் வைத்தியசாலைகளில் உயிரிழந்துள்ளனர். ஒருவர் வீதியில் உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!