கொழும்பு மாநகர எல்லைக்குள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வசிப்பவர்களுக்காகவும், அடுக்குமாடி குடியிருப்புக்களில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் நடத்தப்படும் இலவச நடமாடும் கிளினிக்குகள் அடுத்த மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை குறித்த கிளினிக்குகள் மூலம் சுமார் நான்காயிரம் பேர் வரை சிகிச்சை பெற்றுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.