அம்பாறையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக காணி உறுபத்திரங்கள் கிடைக்காத நிலையில் இருந்து வந்த 1456 பேருக்கு, காணி உறுதிப் பத்திரங்களை பிரமர் ரணில் விக்ரம சிங்க இன்று அம்பாறையில் வழங்கி வைத்தார்.
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர் தயாகமகே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாகக்கலந்து கொண்டதுடன், காணி விவகார அமைச்சர் ஜயந்த கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் அனோமா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் எம்;.ஐ.எம்.மன்சூர், மாவட்ட செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் காணி விவகார அமைச்சர் ஜயந்த விக்ரமரத்தன ஆரம்ப உரை நிகழ்த்தியதுடன். மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இலங்கையில் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவிலானவர்கள் இதுவரையில் காணி உறுதிப் பத்திரம் பெறாதவர்களாக உள்ளனர். இது கவலைக்குரிய விடயமாகவுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தேசிய ரீதியில் 10 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தினை அமைத்து இவ்வாறு நீண்டகாலமாக காணிப் பதத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கையை காணி அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார்.
மிகவும் பழமை வாய்ந்ததும், பாரம்பரியதுமான அனைத்து இனத்தவர்களும் சாந்தியும், சமாதானமுமாக வாழ்ந்து வருகின்ற ஒரு மாவட்டமாக அம்பாறை மாவட்டம் காணப்படுகின்றது.
அந்தவகையில் இங்கு இருக்கின்ற முக்கிய பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை தீர்த்து வவைப்பதற்கு எமது அரசாங்கம் இன, மத, அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் செயற்பட்டு வருகின்றது என்றார். (சி)