தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில், சில பகுதிகளுக்கு நாளை தளர்வு – இராணுவத் தளபதி

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் பிரிவுகள் நாளை விடுவிக்கப்படும் என, இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்தின் புறக்கோட்டை, மட்டக்குளி, கரையோர பொலிஸ் பிரிவு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் ராகமை மற்றும் நீர்க்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இப்பகுதிகள் நாளை காலை 05 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!