திருகோணமலை மாவட்டத்தில் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் பேண்தகு சுற்றுச்சூழல் பாதுகாப்பை இலக்காக கொண்டு ‘இளைஞர் அபிவிருத்தி அகம்’ அமைப்பு பல்வேறு பயன்தரும் நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாக நிறுவனத்தின் இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம் தெரிவித்துள்ளார்.
பயன்தரு மரக்கன்றுகள் கையளிக்கும் நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.
முதல்கட்டமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், வெருகல், சேருவில பிரதேச செயலாளர்;பிரிவுகளில் 2000 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டமாகவும் இரண்டாயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுவருவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை பேண்தகு சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த பத்தாயிரம் பனை விதைகள், ஐயாயிரம் கண்ணா மரங்கள் என்பனவும் கடந்த இரு மாதத்தில் நடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகத்தின் 21வது ஆண்டை முன்னிட்டு இந்த பேண்தகு அபிவிருத்தி புரட்சி, தேர்தெடுக்கப்பட்ட கூட்டுறவு பிரதிநிதிகளுக்குக்கூடாக மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.