அம்பாறை – கள்ளியம்பத்தை இறக்க பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய உள்ளக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 4 கோடியே 25 இலட்சம் ரூபா செலவில் அம்பாறை சம்மாந்துறை- வளத்தாப்பிட்டி, மோராவில் ஆற்றுக்கு குறுக்காக கள்ளியம்பத்தை இறக்க பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் அயராத முயற்சியில் இப்பிரதேச விவசாயிகளின் மிக நீண்டகாலத் தேவையாக இருந்த இப்பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கள்ளியம்பத்தை விவசாய கண்ட குழுத்தலைவர் ஏ.எம்.ஏ.காதர் தலைமையில் இன்று நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப்பாலத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் சுகத் கமகே, சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் எம்.எஸ்.நவாஸ், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அச்சி முகம்மது, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோகச் செயலாளர் சட்டத்தரணி எம்எ.ம்.சகுபீர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.அன்வர், விவசாய அமைப்புக்கிளின் பிரதிநிதிகள், விவசாயிகள், அரசியல் பிரமுகவர்கள், உலமாக்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்பாலமானது 27 மீற்றர் நீளமும், 6 மீற்றர் அகலமும் கொண்டதுடன் புதிய வளத்தப்பிட்டி, மல்வத்தை, இஸ்மாயில்புரம், மல்லிகைத்தீவு போன்ற கிராமங்களிலிருந்து இறக்காமம் கிராமத்திற்கு விவசாயிகளும், பொதுமக்களும் மிக இலகுவாக இப்பாலத்தின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளவும் மேலும், மோறாவில் பிரிவிலுள்ள கள்ளியம்பத்தை, வட செலியா, தொட்டம், ஹிஜ்ரா கண்டத்திலுள்ள விவசாயிகள் உட்பட 5000ற்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரிதும் நன்மையடையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!