மட்டு- வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து- இருவர் படுகாயம்

மட்டக்களப்பு –வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று அதிகாலை இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட பாரிய விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மரம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறியுடன்;, பொருட்கள் ஏற்றி வந்துகொண்டிருந்த கன்டைனர் லொறி நேருக்கு நேர் மோதிப் பின்னர் மின்சார தூணில் மோதியது.

இதன்போது இரண்டு லொறிகளும் பாரிய சேதமடைந்துள்ள போதிலும், இரண்டு லொறியிலும் பயணித்தவர்களுக்கு உயிர் சேதம் ஏற்படவில்லை.
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் வழமைக்குத் திரும்பியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புகை மூட்டத்துடன் கூடிய பனி பெய்துவரும் நிலையில், இவ்விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!