கொரோனா:இன்று மாலை 342 பேர் அடையாளம்!

நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரித்துள்ளது.

இன்று மாலை, மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான 342 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம், இன்று மாலை 6.20 மணிக்குப் பின்னர் வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், நாட்டில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை, 21 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.

இதில், மேலும் 369 பேர், இன்று பூரண குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 15 ஆயிரத்து 816 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதனால், தற்பொழுது, 5 ஆயிரத்து 899 பேர், தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், 650 பேர், கொரோனா சந்தேகத்தில், வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 96 பேர், இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் நேற்று கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 502 பேரில், 262 பேர், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என, கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், புதுக்கடையில் 42 பேரும், மட்டக்குளி பகுதியில் 42 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

கம்பஹா மாவட்டத்தில் 90 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 46 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 15 பேரும், நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 8 பேர், கேகாலை மாவட்டத்தில் 7 பேர், பதுளை மாவட்டத்தில் 6 பேர் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் 5 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 3 பேர், குருநாகல் மாவட்டத்தில் ஒருவர், காலி மாவட்டத்தில் ஒருவர், மாத்தறை மாவட்டத்தில் ஒருவர் என பலர், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!