பெண்களுக்கான சுகாதார பாதுகாப்பை, அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் றோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில், எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
பெண்களுக்கான சுகாதார துவாய்களுக்கான வரியை நீக்க வேண்டும் என்று, அமைச்சர் சேமசிங்க கூறியது சரி என்றவாறாக, அமைச்சர் நாமல் ராஜபக்ஸ டுவிட் செய்துள்ளார்.
இது தொடர்பான முடிவை எடுக்க வேண்டியவர் யார்,
நிதி அமைச்சர் அல்லவா?
அரசாங்கத்தில் வௌ;வேறு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒரு தரப்பினரால் எடுக்கப்படும் முடிவுகளே செயற்படுத்தப்படுகின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த அரசாங்கம், பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சுகாதார துவாய்களுக்காகு, 51 வீத வரியை விதித்துள்ளது.
இதன் காரணமாக, பொருளாதார சிக்கல் நிலையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு, பெருஞ்சுமையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து பெண்களுக்கும், சுகாதார துவாய்களை பெற்றுக்கொள்ள கூடிய நிலைமையை உருவாக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஏனெனில், நாட்டிலுள்ள மொத்த பெண்களில் 32 வீதமானோரே, சுகாதார துவாய்களை பாவிக்கின்றனர்.
இது ஆடம்பரப்பொருளல்ல.
மாறாக பெண்களுக்கு அத்தியாவசியமான பொருளாகும்.
ஆகவே, இதற்கான வரியை குறைக்க அரசாங்கம் நவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேசிய பாதுகாப்பு என கூறிக்கொள்ளும் அரசாங்கம், பெண்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனில் தேசிய பாதுகாப்பிற்குள், நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பும் உள்ளடங்கும் அல்லவா. என குறிப்பிட்டுள்ளார்.