யாழ்ப்பாணத்தில், தனியார் தொலைத்தொடர்பு சேவையினை வழங்கும் நிறுவனம் ஒன்று அனுமதி பெற்றுக்கொள்ளாது தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றினை யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை வீதியில் உள்ள தனியார் காணியில் அமைத்துவருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றினையும் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, போராட்ட இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு அறிவுறுத்திய நிலையில், போராட்டம் கைவிடப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.(சி)