மூதூரில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இருவருக்கு விளக்கமறில்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 41 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இருவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் மஹ்ரூப் உத்தரவிட்டார்.

கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 27 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூதூர் பெரிய பாலம் பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதியொன்றில் வைத்து மூதூர் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் இருந்து ஐந்தாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் ஏழும், ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் ஐந்தும், ஐந்நூறு ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேக நபர்கள் பயன்படுத்திய கணினி, தொலைநகல், அச்சு பதிப்பு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் பொலிஸார்
ஆஜர்படுத்திய போது நீதிபதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!