2021 பட்ஜெட்- 2ஆம் வாசிப்பு மீதான 4ஆம் நாள் விவாதம்!

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதம் பாராளுமன்றத்தில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

கடந்த 17 ஆம் திகதி பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 18 ஆம் திகதி முதல், வரவு, செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதேவேளை வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வரவுச் செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் நான்காம் நாள் விவாதம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!