இ.போ.ச தூர சேவைகள் மீள ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பேருந்துகளையும் வார இறுதி நாட்களான இன்றைய தினமும், நாளைய தினமும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் நீண்ட தூர பேருந்து சேவைகளை மீள ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து பேருந்துகளையும் இயக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக பேருந்துகளை இயக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளபோதிலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பயணிளை ஏற்றுவதற்கோ அல்லது இறக்குவதற்கோ முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வார இறுதி நாட்களில் பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!