கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 439 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இனங்காணப்பட்ட அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 280 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 5 ஆயிரத்து 935 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு,
13 ஆயிரத்து 271 பேர் குணமடைந்துள்ளனர்.

எனினும் 462 பேர் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு – 2 பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்வடைந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!