ஊடகத்தை நாடாளுமன்று ஓரங்கட்டுகிறது! ஐ.தே.க தலைவர் ரணில் விசனம்

ஊடகத்தை நாடாளுமன்றம் ஓரங்கட்டுவது நியாயமற்ற செயற்பாடு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் முக்கிய தூணாகவிளங்கும் ஊடகத்தை நாடாளுமன்றமே ஓரங்கட்டுவது என்பது ஜனநாயகத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று, கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பில் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்கள் தன்னை மோசமான முறையில் விமர்சித்தபோதும், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தான் மும்முரமாகச் செயற்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 தொற்றைக் காரணம் காட்டி ஊடகங்களுக்கு நாடாளுமன்றக் கதவுகள் மூடப்பட்டமை தவறான செயற்பாடு என்று சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, தற்போதைய எதிர்க்கட்சியினர் இது குறித்து பேசுவதில்லை என்ற தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட தரவுகள் பல தவறானவை என்றும், போலித் தரவுகளுடன் செயற்பட்டால் பணவீக்கமே ஏற்பட்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மக்களிடம் பணமில்லாத நிலையில் வரிச் சலுகைகள் வழங்கி என்ன பயன் என ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!