ஓட்டோ கட் கற்கை: சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

டி.எம்.ஐ கணினி கல்வி நிலையத்தால் ஓட்டோ கட் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு விசுவமடு திறன் விருத்தி நிலையத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சித் திட்டத்திற்கு பெரண்டினா தொழில்வள நிலையத்தால் 3 இலட்சம் ரூபாயும், சைல்ட் பெஸ்ட் நிறுவனத்தால் 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயும் பங்களிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் துரைசிங்கம், ஜெயந்தன், பெரண்டினா தொழில்வள நிலையத்தின் மாவட்ட முகாமையாளர் செல்வநாயகம் ஸ்டெவின், டி.எம்.ஐ நிறுவனத்தின் உத்தியோகத்தர் திருமதி மிதுலா ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!