மட்டு வவுணதீவு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு – இருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று மாலை வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருட்டுச்சோலைமடு பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வுகள் நடைபெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது இருட்டுச்சோலைமடு பகுதியின் வயல் பகுதியில் குறித்த சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவரை கைதுசெய்த பொலிஸார் அவர்களிடம் இருந்து மண் ஏற்றிச்செல்லும் கண்டர் வாகனம் மற்றும் மண் அகழ்வு பணியில் ஈடுபடுத்தப்படும் கவுன்டி என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!