வட மாகாண ஆளுநருடன் யாழ். வர்த்தக சங்கங்கத்தினர் கலந்துரையாடல்!

நகைத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநருக்கும், யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நகைத் தொழிலாளர்களின் கொள்வனவு, விற்பனை செயற்பாடுகளின்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது, கலந்துரையாடப்பட்டது.

இதன்போது நகைத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வாக கட்டாயமாக நபரின் ஆள் அடையாள அட்டைப் பிரதி, முகவரி, தொலைபேசி இலக்கம், நகையின் அளவு மற்றும் நகையின் புகைப்படம் என்பவற்றை விலைப்பட்டியலுடன் இணைக்க வேண்டும் என ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!