10 ஆண்டுகளில் முதல்முறையாக வெனிசுலாவுக்கு தூதரை அமெரிக்கா நியமித்தது

அமெரிக்காவுக்கும், வெனிசுலா நாட்டுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், 10 ஆண்டுகளில் முதல்முறையாக வெனிசுலாவுக்கு தூதரை அமெரிக்கா நியமித்துள்ளது.

வெனிசூலா அதிபர் நிகோலஸ் மதுரோவை போதைப்பொருள் பயங்கரவாதி என டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி வந்தநிலையில், இரு நாடுகள் இடையே தூதரக உறவு இல்லாமல் இருந்தது.

இதேவேளை அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் இடம்பெற்ற குரல் வாக்கெடுப்பில் ஜேம்ஸ் ஸ்டோரி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளில் முதல் முறையாக வெனிசுலா நாட்டுக்கு ஜேம்ஸ் ஸ்டோரி என்பவரை தூதராக அமெரிக்கா நியமனம் செய்துள்ளது.

அமெரிக்காவில் ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்க இருப்பது, அமெரிக்கா, வெனிசுலா இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!