பாரிஸ் குசன்வீல் படுகொலை: மூவர் கைது

பிரான்ஸ் பாரிஸ் புறநகரான குசன்வீல் பகுதியில் இலங்கைத் தமிழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை பிற்பகல் கிடைத்த தகவலின் பிராகரம், குசன்வீல் பகுதிச்குச் சென்ற, அவசர மீட்புப் பணியாளர்கள்
உயிரிழந்த நிலையில் 56 வயதுடைய நபரொருவரின் சடலத்தை மீட்டனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர், வீட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அங்கு தங்கியிருந்த 52 மற்றும் 42 வயதுகளையுடைய இரண்டு இலங்கைப் பிரஜைகள் குசன்வீல் பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர்களான இவர்கள் இருவரும் கொலைசெய்யப்பட்டவரது வீட்டில் வாடகை இன்றி வசித்துவந்தவர்கள் என கூறப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட சமயம் இருவரும் மது போதையில் இருந்தனர் என்றும் பொலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் மூன்றாவது நபர் ஒருவரும் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை குசன்வீல் பொலீஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!