மட்டக்களப்பில் ஆவணப்படம் வெளியீடு

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் உள்வாங்குதல் தொடர்பான ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வை.எம்.சி.எ நிறுவனம் சி.பி.எம் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மாவட்டத்தில் உள்வாங்கப்பட்ட மற்றும் நெகிழ்ச்சித் தன்மையுடையதான சமூகத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் உள்வாங்குதல் தொடர்பான சமூகத்தை மீள் உருவாக்கலுக்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் உள்வாங்குதல் திட்டங்கள் தொடர்பாக ஆவணம் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வை.எம்.சி.எ நிறுவன தலைவர் சபாநாதன் ஜேசுதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அதிதியாக கலந்துகொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டு வைத்தார்.

ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் அதிதிகளாக, மட்டக்களப்பு மாவட்ட சமுக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலிகார், மட்டக்களப்பு வை.எம்.சி.எ நிறுவன பொதுச்செயலாளர் ஜெகன் ஜீவராஜ், நிறுவன செயல்பாட்டு செயற்பாட்டாளர் எஸ்.பெற்றிக், ஆவணப்பட தயாரிப்பாளர் தேவ அலோசியஸ், நிறுவன உத்தியோகத்தர்கள், வாழ்வோசை பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!