கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட மூன்று தோட்ட வீதிகள், மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டம் ஹங்குராங்கெத்த பகுதியில் கபரகல, கோணபிட்டிய, மெரிகோல்ட் ஆகிய தோட்டங்களில் கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட மூன்று தோட்ட வீதிகள், மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சுமார் 30 லட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட கொங்கிறீட் வீதிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு, விசேட பிராந்திங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மூன்று வீதிகளும் அமைச்சரால் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டன.
குறித்த வீதிகள் கடந்த பல வருட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்டதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர்.
இந்த நிலைமையினை மக்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து, அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீதியின் ஒரு பகுதி புனரமைக்கப்பட்டுள்ளது.(நி)