கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியிலுள்ள தொடரூந்து பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து இன்று அதிகாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் கடந்த 25ம் திகதி இடம்பெற்ற விபத்தில் 6 படையினர் உயிரிழந்திருந்திருந்தனர்.
இதனை அடுத்து குறித்த பாதுகாப்பு கடவையை சீர் செய்து தருமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)