கொத்மலை புளும் பீல்ட் தோட்ட முகாமையாளர் மீது தாக்குதல்!

கொத்மலை புளும் பீல்ட் தனியார் தோட்ட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் மீது அந்த தோட்ட தொழிலாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டம் கொத்மலை புளும் பீல்ட் தனியார் தோட்டத்தில் தோட்ட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஆகிய இருவர் மீது அந்த தோட்ட தொழிலாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது சொத்துகள் சிலவற்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அப்பகுதியை சேர்ந்த 18 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புளும் பீல்ட் தோட்டத்தில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊழியர் நம்பிக்கை நிதி, ஊழியர் சேமலாப நிதி ஆகியவற்றை அவர்களின் கணக்கில் வைப்பிலிடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மதியம் தொழிலாளர்கள் குறித்த தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே தொழிலாளர்கள் சிலர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தோட்ட முகாமையாளரின் விடுதிகள் இரண்டுக்கும், வாகனங்கள் இரண்டுக்கும், கட்டிடங்கள் சிலவற்றிருக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், அங்கிருந்த 15 இலட்சம் ரூபா பணமும் களவாடப்பட்டதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை 18 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த தோட்ட மக்களையும், அங்குள்ள சொத்துக்களையும் பாதுகாக்க பொலிஸ் பாதுகாப்பும், இராணுவ பாதுகாப்பும், விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!