நாட்டுக்காக ஒன்றிணைவோம் இறுதி நாள் நிகழ்வு இன்று!

நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இறுதி நாள் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.

நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இறுதி நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

பிபிலை பொது விளையாட்டரங்கில் இறுதி நாள் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்டத்தின் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

மாவட்டத்தின் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக 36 மில்லியன் ரூபாய் செலவில் வெள்ளவாய தள வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக பிரிவும் மக்களிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின்கீழ் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த வகையில், ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’தேசிய செயற்திட்டத்தின் ஐந்தாவது செயற்திட்டம் கடந்த முதலாம் திகதி மொனராகலை மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பமானது.

மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை, தனமல்வில, மடுல்ல, கதிர்காமம், புத்தளம், படல்கும்புர, வெல்லவாய, மெதகம, சியம்பலாண்டுவ, பிபிலை, செவனகல ஆகிய 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 319 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி இந்த நிகழ்ச்சித்திட்டம் ஒரு வார காலமாக இடம்பெற்றது.

மக்கள் தமது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைக்கக்கூடிய வகையில் ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க நிகழ்வுகளும் இந்த வாரம் முழுவதும் அம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!