ராஜஸ்தான், சென்னை வெற்றி!

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டு போட்டிகளில்
ராஜஸ்தான் றோயல்ஸ் மற்றும் சென்னை அணிகள் வெற்றியீட்டியுள்ளன.
நேற்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெற்றன.

முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் மோதின.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 6 இலக்குகளை இழந்;து
145 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

146 என்ற வெற்றியிலக்கு நோக்கித் துடுப்பெடுத்தாடிய சென்னை, 19வது பந்துப்பரிமாற்றத்தில்
வெற்றியிலக்கை அடைந்தது.

சென்னை சார்பில் ருத்ராஜ் கெய்க்வாட் 65 ஓட்டங்களையும், ராயுடு 39 ஓட்டங்களையும், டோனி 19 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை மற்றுமொரு போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை எதிர்த்து, மும்பை அணி மோதியது.
மும்பை அணி 20 பந்துப்பரிமாற்ற நிறைவில் 195 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

196 என்ற இமாலய இலக்கு நோக்கித் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ், 2 இலக்குகளை மாத்திரம் இழந்து 19 வது பந்துப்பரிமாற்றத்தில் வெற்றியிலக்கை அடைந்தது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!