2015க்கு பின்னரே மாகாண பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு!

2015 ஆம் ஆண்டிற்க பின்னரே, மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு, அதிகளவான நிதி ஒக்கீடுகள் கிடைக்பெற்றன என முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.

1989 – 2015 ஆம் ஆண்டு வரையிலும் மத்திய அரசாங்கத்தில் இருந்து மாகாண பாடசாலைகளுக்கு எந்தவிதமான நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட வில்லை.

2015 ஆம் ஆண்டிற்குப் பின்னரே அதற்கு இடப்பட்டிருந்த கடிவாளத்தை உடைத்து மத்திய அரசாங்கத்தில் இருந்து மாகாண மட்டப் பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது என முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

கல்ஹின்னை பட்டகொல்லாதெனிய ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2 கோடி 30 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள தொழில்நுட்ப கூடத்திற்காக அடிக்கல் நாட்டுவிழா பாடசாலை அதிபர் ஏ.ஏ.எம்.இக்ரம் தலைமையில் இடம்பெற்று.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் இவ்வாறு இதனத் தெரிவித்தார். (நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!